Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கட்டுநாயக்கவிமான நிலையத்தில் முல்லைத்தீவு இளைஞன் கைது!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த இளைஞர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக...

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த இளைஞர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முறிப்பு பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் -அனோயன் (வயது 23 ) என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்டவிரோதமான மரம் வெட்டும் முயற்சியை தடுக்கச் சென்ற வனவள உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியமை, படையினரின் துப்பாக்கியை பறித்தமை, உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தால் குறித்த இளைஞருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் சந்தேகநபர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முடியாதவாறும் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் கடந்த திங்களன்று அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


No comments

Latest Articles