Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

அமைச்சரின் அறிவிப்பை தூக்கி எறிந்த பிறிமா நிறுவனம்! அதிகரித்த விலை குறைக்கப்படாதென தெரிவிப்பு!

கோதுமை மாவு விலை பழைய விலைக்கே குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் கூறிய ஒரு நாள் கழித்து, எந்த சூழ்நிலையிலும் கோதுமை மாவு விலை குறைக்கப்...

கோதுமை மாவு விலை பழைய விலைக்கே குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் கூறிய ஒரு நாள் கழித்து, எந்த சூழ்நிலையிலும் கோதுமை மாவு விலை குறைக்கப்படாது என்று பிறிமா நிறுவனம் தனது விற்பனை முகவர்களுக்கு தெரிவித்துள்ளது.

அமைச்சர் ஹரிசன் நேற்று (செப்ரெம்பர் 10 ) வாழ்க்கை செலவு அமைச்சரவை துணைக் குழுவுடன் கோதுமை மாவு நிறுவனங்கள் சந்தித்ததைத் தொடர்ந்து விலைகளைக் குறைக்க ஒப்புக் கொண்டதாகக் கூறினார்.

எனினும், உலக சந்தையில் அதிகரித்து வரும் விலைகள் மற்றும் அதிக இறக்குமதி வரி ஆகியவை கோதுமை மாவு விலையை கடந்த வாரம் ரூ .5.50 வரை உயர்த்த வழிவகுத்ததாக நிறுவனத்தின் முகவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வைத் தொடர்ந்து, பாண் விலையும் ரூ .2 ஆக உயர்த்தப்படும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

இதற்கிடையில், உள்ளூரில் கோதுமை மாவு ரூ .90 முதல் ரூ .100 வரை மாறுபட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக விற்பனை முகவர்கள் கூறுகின்றனர்.


No comments

Latest Articles