Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

புதுமணத்தம்பதிகள் சென்ற வானை மோதித் தள்ளியது ரயில் - 10 பேர் பலி!

பங்களா தேஷில் திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வான் புகையிரதத்தால் மோதுண்டு விபத...


பங்களா தேஷில் திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வான் புகையிரதத்தால் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மணமகன் மணமகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 145 கிலோமீற்றர் தொலை­வி­லுள்ள உலஹ்­பரா பிராந்­தி­யத் திலேயே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையொன்றை குறித்த வான் கடக்க முயற்­சித்த போது டாக்கா நகரை நோக்கிப் பய­ணித்த புகையிரதத்தால் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பிராந்­திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விபத்து இடம்பெற்ற போது அந்த வானில் 14 பேர் இருந்­துள்­ளனர்.

இந்த விபத்தில் மணமகன் மற்றும் மணமகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்­திலேயும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையிலும் உயி­ரிழந்துள்ளனர்.

No comments

Latest Articles