Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

தலைவராக மஹிந்த, ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய! விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ...


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாகவும் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் மாதம், நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாட்டில் இந்த நியமனங்களை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Latest Articles