Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ். விமானப் படையின் கண்காட்சிக்கு கஞ்சாவுடன் சென்ற பெண்!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவைச் ...

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான குறித்த யுவதியிடமிருந்து 2 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

இதன்போது, கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோது அவரிடம் கஞ்சா இருந்தள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த பெண் விமானப்படையினரால் கைதுசெய்யப்பட்டு யாழ்;. பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளநிலையில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments

Latest Articles