வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டசுற்றுப்போட்டியில் 60 லீக் முறையிலான ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் நாளைமறுதினம் (13.09.2019)...
வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டசுற்றுப்போட்டியில் 60 லீக் முறையிலான ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் நாளைமறுதினம் (13.09.2019) முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு காலிறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த காலிறுதிப்போட்டிகள் அனைத்தும் யாழ்.துரையப்பா மைதானத்தில் இரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகும்.
இதன்படி முதலாவது காலிறுதி ஆட்டத்தில் ரில்கோ கெங்கியூறஸ் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.
மறுநாள் 14 ஆம் திகதி வல்வை எப்.சி அிணை எதிர்த்து மட்டுநகர் சுப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது.
15 ஆம் திகதி நொதேன் எலைட் அணியை எதிர்த்து முல்லை பொனெக்ஸ் அணி மோதவுள்ளது.
16 ஆம் திகதி தமிழ் யுனைட்டட் அணியை எதிர்த்து வவுனியா வொறியஸ் அணி மோதவுள்ளது.
காலிறுதி போட்டிகள் நிறைவடைந்து நான்கு அணிகள் தெரிவாகி அரையிறுதி ஆட்டங்கள் இடம்பெறும்.
இறுதிப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளது.
மிகவும் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெறவுள்ள இந்த ஆட்டங்களை காண அலைகடலென ரசிகர்களை திரண்டு வருமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.



No comments