நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏல விற்பனை நேற்றைய தினம் நடைபெற்றது. இவ் ஏல விற்பனையில் நடப்பாண்டில் அதி...
நடப்பாண்டிற்கான வட கிழக்கு பிறீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏல விற்பனை நேற்றைய தினம் நடைபெற்றது.
இவ் ஏல விற்பனையில் நடப்பாண்டில் அதி கூடிய தொகையில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் வீரராக ஊரெழு றோயல் அணியின் வீரர் தர்மகுலநாதன் கஜகோபன்.
கிளியூர் கிங்ஸ், நொதேர்ன் எலைட் & ரில்கோ கொங்கர்ஸ் எப்.சி அணிகளுக்கிடையிலான கடும் போட்டியின் முடிவில் 330 000/- க்கு நொதேர்ன் எலைட் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ரில்கோ கொங்கர்ஸ் அணிக்காக ஆடிய இவ் வீரர் கழக மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் & தேசிய மட்ட போட்டிகளில் விளையாடி அனுபவம் கொண்ட வீரராவர்.
28 வயதையுடைய கஜகோபன் முன்களம், மத்திய களம் & பின்களம் பகுதிகளில் விளையாடிய கூடிய திறமை கொண்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அனுராதபுரம் சொலிட் அணிக்காக ஆடிய கஜகோபன் தற்போது இலங்கை சிறைச்சாலை அணிக்காக ஆடி வருகிறார்.
வாழ்த்துக்கள் கஜகோபன்.
www.queenlanka.com



No comments