அபிதாபியில் வசித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றுக்கு லாட்டரி சீட்டு மூலம் .22 கோடியே 47 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்து...
அபிதாபியில் வசித்து வரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றுக்கு லாட்டரி சீட்டு மூலம் .22 கோடியே 47 லட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் அவர்களது குழந்தை நட்சத்திரா ஆகியோர் ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் கடந்த 9 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.
மனைவி சொப்னா அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிகிறார்.
அபிதாபியில் பிக் டிக்கெட் என்ற லாட்டரி சீட்டு குலுக்கல் சமீபத்தில் நடந்தது. இந்த லாட்டரி சீட்டை மனைவி சொப்னா தனது கணவர் பிரேமுக்கு தெரியாமல் வாங்கியிருந்தார்.
அதில் சொப்னா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.22 கோடியே 47 லட்சம் பரிசாக கிடைத்தது.
அதற்கு பரிசு விழுந்த பிறகுதான் லாட்டரி வாங்கியது குறித்தும் அதற்கு பரிசு கிடைத்த தகவலையும் கணவரிடம் கூறினார்.
இதனால் அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்தார். தனது மகள் நட்சத்திராவின் அதிர்ஷ்டமே இதுவரையிலான தங்களின் அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம் என சொப்னா தெரிவித்தார்.



No comments