இந்தியா - இலங்கை அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியின் இடையே வானில் பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி...
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியின் இடையே வானில் பறந்த விமானத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டி ஆரம்பமாகி சில ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட பின், வானில் விமானம் ஒன்று சென்றது.
அதன் பின்னே "JUSTICEF OR KASHMIR (காஷ்மீருக்கு நீதி)" என்று எழுதப்பட்ட வாசகம் பறக்கவிடப்பட்டது.
காஷ்மீர் போராளிகள் மற்றும் ஆதரவாளர்கள் அந்த விமானத்தை பயன்படுத்தி இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விமானம் பல முறை மைதானத்தை சுற்றி வலம் வந்தது. இதனால் போட்டியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் நிறுத்தப்படவில்லை என்றாலும், மைதானத்தில் அமர்ந்து இருந்த ரசிகர்கள் சிலர் பீதி அடைந்தனர்.
ட்விட்டர் மற்றும் பிற சமூக வலை தளங்களில் அந்த விமானத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டனர்.
உலகக்கோப்பை தொடரில் இது போல இரண்டாவது முறையாக இப்படி நடக்கிறது.
இது போன்ற சம்பவங்கள் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி இருக்கின்றதாக இந்திய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.



No comments