Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

23 வருடங்களாக வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு வலியால் துடித்த பெண்!

ரஷ்யாவில் வடக்கு ஆஸ்டியா என்ற பகுதியில் எஸீட்டா கோபீவா என்ற பெண்ணுக்கு அடிவயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள...


ரஷ்யாவில் வடக்கு ஆஸ்டியா என்ற பகுதியில் எஸீட்டா கோபீவா என்ற பெண்ணுக்கு அடிவயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

23 வருடங்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணுக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி வந்து கொண்டே இருந்துள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

23 வருடமாக எலீட்டா கோபீவாவுக்கு வந்த வயிற்று வலிக்கு மருந்து கொடுத்தே வந்துள்ளார்கள். ஆனால் அது தீர்ந்தபாடில்லை.

இறுதியாக ஒரு மருத்துவர் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தார். 

எலீட்டாவுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவருக்கு “தன் கண்களையே நம்ப இயலவில்லை. எலீட்டாவின் வயிற்றுக்குள் கத்தரி ஒன்று இருந்தது. யார் வைத்தது? யார் வைத்தது? வயிற்றினுள் கத்தரிகோல் எப்படி வந்திருக்கக்கூடும்” என்று மருத்துவர்கள் கேட்டபோது எலீ்ட்டாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. 

தனக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறினார். 

அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கத்தரியை மறந்துபோய் எலீட்டாவின் வயிற்றுக்குள் வைத்துவிட்டது தெரிய வந்தது. 

23 ஆண்டுகள் தேவையில்லாமல் வேதனைப்பட்டதற்கு எலீட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் சம்மந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

No comments

Latest Articles