Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கிளிநொச்சி - முக்கொம்பன் கிராமத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினரும் பொலிஸாரும்!

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முக்கொம்பன் கிராமத்தில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் நேற்று அதிகா...



கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முக்கொம்பன் கிராமத்தில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் நேற்று அதிகாலை முதல் பத்து மணி வரை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கொம்பன் கிராமத்தின் பத்து வீட்டுப் பகுதி பிரதேசமே இவ்வாறு சோதனைக்கு உட்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இச்சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டிருந்தனர். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளும், தேடுதல்களும் தற்போது இல்லாதிருந்த நிலையில் நேற்றைய தினம் முக்கொம்பன் கிராமம் படையினரால் சோதனைக்கு உட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles