Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இலங்கையில் இரண்டாவது வெடி குண்டு தாக்குதல் நடத்த திட்டம்!! உச்சகட்ட பதற்றத்தில் சிறிலங்கா!

இலங்கையில் இரண்டாவது தாக்குதல் ஒன்றை நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ...

இலங்கையில் இரண்டாவது தாக்குதல் ஒன்றை நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து இந்திய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்தத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு புலனாய்வு, தொழிநுட்ப உதவியை வழங்குவதாக இந்தியா இலங்கைக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு ஐ.எஸ் அமைப்பின் உதவியுடன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ள போதிலும் குறித்த இரு அமைப்புகளுக்கிடையில் நேரடி தொடர்புகள் உள்ளனவா என்பது தொடர்பில் மேலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக “ஹிந்துஸ்தான் டைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Latest Articles