Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு!

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்...

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, நாடுதழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் குறித்த பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த வெடிப்பு தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென படைத்தரப்பு சந்தேகிக்கின்றது.தேடுதல் நடவடிக்கையின் போது பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
                
இதேவேளை சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments

Latest Articles