கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வெடிபொருட்களுடன் லொறி ஒன்றும் வான் ...
வெடிபொருட்களுடன் லொறி ஒன்றும் வான் ஒன்றும் உலவுவது குறித்து கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
5 பைக்குகள், ஒரு கேப் வாகனம் குறித்தும் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன
இதேவேளை போத்தல் மற்றும் கலன்களுக்கு பெட்ரோல் விநியோகிக்க வேண்டாமென அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான வானகங்கள், நபர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் 116 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது
தேடப்படும் லொறி மற்றும் பைக்குகள் விபரங்கள்
Car - Number : 15 - 0316 (Light Blue)
Car - Number : CBF 1668 (White)
Car - Number : UP 7783
Bike - Number : VL 9223
Bike - Number : BCK - 5048
Bike - Number : BHF 5891 (Scooty)
Bike - Number : MR 1605
Bike - Number : BCY - 2183
Bike - Number : BAO - 5891
Mini Van - Number : PH 3778 (Hi Jet)
இது தொடர்பில் தற்பொழுது கிடைத்த தகவல்
கொழும்பு – கோட்டை பகுதியில் முப்படையினர் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனையில் உட்படுத்தப்பட்டு வருகின்றன.
முக்கிய அரச அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் மற்றும் பொதிகள் பொருட்களை கண்டால் உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.



No comments