கொழும்பு - மருதானை ரயில் நிலையம் முன்பாக பயணிகள் மேம்பாலத்தின் மீது மோதிய காருக்குள் இருந்து 7 மில்லியன் ரூபா பெறுமதியான 68 கிலோ கஞ்சா மருத...
கொழும்பு - மருதானை ரயில் நிலையம் முன்பாக பயணிகள் மேம்பாலத்தின் மீது மோதிய காருக்குள் இருந்து 7 மில்லியன் ரூபா பெறுமதியான 68 கிலோ கஞ்சா மருதானை பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவத்தில், தப்பியோடியதாக கூறப்படும் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருதானை பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு விசாரணைகளில், தப்பியோடிய குறித்த சந்தேக நபர்கள் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்துள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.
இந் நிலையில் அவர்களைக் கைது செய்ய மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments