டில்லியில் தொழிற்சாலை ஒன்றில் சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமட...
டில்லியில் தொழிற்சாலை ஒன்றில் சிலிண்டர் வெடித்து கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சுதர்சன் பார்க்கில் செயற் பட்டு வந்த 2 மாடிகளை கொண்ட மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலை கட்டடத்தின் ஒரு பகுதியில் சிலிண்டர் வெடித்ததால், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை யினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 15க்கும் மேற்பட்டோரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிழந்துள்ளதோடு, குறித்த கட்டடத்தின் உரிமையாளர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மேலும் 7 பேர் கட்டட இடுபாடுகளில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



No comments