Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இலங்கைக்கு வந்துள்ள நெருக்கடி உலக வங்கியின் எச்சரிக்கை!

தெற்காசியப் பிராந்திய நாடுகளிலே இலங்கை வலுவானதொரு பொருளாதார நிலைமையை கொண்டுள்ள போதிலும், அதனால் அடையக்கூடிய சாத்தியமான பொருளாதார மேம்பாட்டை...

தெற்காசியப் பிராந்திய நாடுகளிலே இலங்கை வலுவானதொரு பொருளாதார நிலைமையை கொண்டுள்ள போதிலும், அதனால் அடையக்கூடிய சாத்தியமான பொருளாதார மேம்பாட்டை இன்னமும் அடையவில்லையென உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை அபிவிருத்தி குறித்த தகவல்கள் அடங்கிய உலக வங்கியின் அறிக்கை வெளியிடும் நிகழ்வு நேற்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் உரையாற்றிய உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியக் கிளையின் பிரதித் தலைவர் ஹர்ட்விங் சேபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு கணிக்கப்பட்டதை விட, 2019ஆம் ஆண்டு சற்று அதிகமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சி 3.1 வீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. எனினும், இந்த ஆண்டு வளர்ச்சி 3.5 வீதமாக அதிகரிக்கும்.

எனினும், அதிகளவு கடன் மீளளிப்பு, பூகோள நெருக்கடிகள், தேர்தல்களால் ஏற்படக் கூடிய அரசியல் உறுதியற்ற நிலை போன்றவற்றினால், இலங்கை கடுமுமையான நெருக்கடிகளை இந்த ஆண்டு எதிர்கொள்ள நேரிடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments

Latest Articles