றம்புக்கன - முவபிடிய பிரதேச வீடு ஒன்றில் இருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி கலகெதர - பெட்டியகொடயில் கஞ்சா தொகையுடன்...
றம்புக்கன - முவபிடிய பிரதேச வீடு ஒன்றில் இருந்து சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 13 ஆம் திகதி கலகெதர - பெட்டியகொடயில் கஞ்சா தொகையுடன் பயணித்து கொண்டிருந்த காவற்துறை அதிரடிபடை உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் மீட்கப்பட்ட குறித்த ஆயுதங்களில் ரி56 ரக ரவைகள், எம் 16 ரக ரவைகள், ரி 56 ரக வெடிபொருட்கள், உட்பட காவற்துறை அதிரடி படையினர் மற்றும் விமான படையினர் பயன்படுத்தும் சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையிலேயே தெரியவந்துள்ளது.


No comments