தமிழர் தாயகப்பகுதியான வடபகுதிக்கு மூன்று நாள் பயணமாக நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அனைத்து நிகழ்வுக...
தமிழர் தாயகப்பகுதியான வடபகுதிக்கு மூன்று நாள் பயணமாக நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அனைத்து நிகழ்வுகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுத்திருந்தனர்.
அத்துடன் ரணில் நேற்றைய தினம் கலந்து கொண்ட அனைத்து நிகழ்வுகளிலும் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்களை விடவும் இவர்களே ரணிலுக்கு அருகில் நெருக்கமாக நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டமையானது தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு சார்பாக செயற்படுவதாக விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் அவர்களது செயற்பாடுகள் இதனைப் பகிரங்கப்படுத்துவது போல் அமைந்துள்ளதாகவும் பேசப்படுகின்றது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ் மாவட்ட செயலகத்திற்கு சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்குமாவட்ட செயலக பணியாளர்கள் தமிழ் பண்பாட்டின் பிரகாரம் பன்னீர் தெளிக்க முற்பட்டனர்.
அப்போது தலையிட்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்பாய்ந்துள்ளார். அது ரணிலிற்கு பிடிக்காது என தெரிவித்ததுடன் எமது கலாச்சாரத்தை அவருக்கு திணிக்க வேண்டாமெனவும் பாய்ந்து விழுந்துள்ளார்.


No comments