ஆபிரிக்க நாடான கென்யாவில் அபூர்வமான கருஞ்சிறுத்தையொன்று புகைப்படமாக்கப்படுள்ளது. கென்யாவிலுள்ள லைகிபியா என்ற வானாந்தரப் பிரதேசத்திலுள்ள...
கென்யாவிலுள்ள லைகிபியா என்ற வானாந்தரப் பிரதேசத்திலுள்ள முகாம் ஒன்றுக்கு அருகாக இரவு முழுவதும் சுற்றித்திரியும்போது இது அதிசக்திவாய்ந்த கமெராவில் பிடிக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள விசேடம் என்னவெனில், ஆபிரிக்காவில் இந்த கருஞ்சிறுத்தையானது சரியாக நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முதலாக கமெராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
முழு பௌர்ணமி இரவில் மிகவும் உல்லாசமாக அங்குமிங்கும் அலைந்து திரியும் இந்த கருஞ்சிறுத்தையின் புகைப்படங்கள் உலகளாவிய ரீதியில் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக இரவில் வேட்டையாடுவதற்காக தனது கண்களை மிகவும் அகலமாக திறந்த நிலையில் தனக்கான இரையினை ஆவலுடன் எதிர்பார்க்கும் பாங்கு காணப்பட்டுள்ளது.




No comments