Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஜனநாயகத்தை சிதைக்கிறது மோடி அரசு; கவிதை மூலம் சாடிய மம்தா!

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதலே பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தன்னாட்சி அமைப்புகளை சிதைப்பது மட்டுமின்றி, ஜனந...


கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதலே பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தன்னாட்சி அமைப்புகளை சிதைப்பது மட்டுமின்றி, ஜனநாயக - மதச்சார்பின்மை, கூட்டாட்சி தத்துவ விழுமியங்களை காலில் போட்டு நசுக்கிவருகிறது. தனியார்மய கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் நன்மைக்காக நடத்தப்படும் இந்த ஆட்சியை அகற்றியே ஆக வேண்டுமென மூர்க்கமாக களத்தில் இறங்கியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோடி அரசை அகற்றிட ஜனநாயக, முற்போக்கு சக்திகள் ஒன்றிணைய வேண்டுமென்ற முழக்கத்தினை முன்வைத்து மேற்கு வங்கத்தில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தினை நடத்திக்காட்டியிருந்தார். இதில், காங்கிரஸ் உள்ளிட்ட நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சி கலந்துகொண்டன.



இந்த நிலையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நடைபெற்று வரக்கூடிய எதிர்க்கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்றுள்ள மம்தா, மோடி அரசின் சர்வாதிகாரப்போக்கு குறித்து கவிதை ஒன்றினை எழுதியுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எல்லோரின் உதடுகளும் பூட்டப்பட்டிருக்கின்றன, இந்த அமைப்பு (பாஜக) எப்படி ஜனநாயகத்தை இக்கட்டான சூழலில் தள்ளுகிறது என விரிகிறது மம்தாவின் கவிதை.மம்தா பன்முகத்தன்மை கொண்டவர் என்பதுவும், இதுவரை சுமார் 80க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Latest Articles

Popular Posts