உலகில் கண்ணீர் விட்டு அழுகின்ற விநோதமான பாம்பு இனம் ஒன்று இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருணாசலப் பிரதேச மானிலத்தின் லெபா-ரடா ம...
அருணாசலப் பிரதேச மானிலத்தின் லெபா-ரடா மாவட்டத்திலுள்ள மலைப்பாங்கான பிரதேசமொன்றிலிருந்தே இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Hebius lacrima எனும் விலங்கியல் பெயரைக் கொண்ட இந்த பாம்பு இனம் குறித்து நியூசிலாந்தின் Zootaxa இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
லக்ரிமா என்பது லத்தீன் மொழியில் கண்ணீர் என அர்த்தப்படுத்தப்படுவதாக அந்தக் குறிப்பில் சொல்லப்படுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பாம்பு நன்கு வளர்ந்த ஒரு ஆண் பாம்பு என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஒரு மனிதனின் சராசரி உயரம் வரையிலான நீளத்திற்கு வளரக்கூடியது என கூறப்பட்டுள்ளது.
இந்த பாம்பு வயல் நிலங்களை அண்டி வாழ்வதாகவும் நீரோடைகளிலுள்ள தவளைகள் மீன்கள் என்பவற்றை உணவாக உட்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments