மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக தேவையான கயிற்றினை வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்வதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது. வெளிநாட்டலு...
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக தேவையான கயிற்றினை வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்வதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சினூடாக கொண்டுவருவதற்காக கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த கயிற்றை கொள்வனவு செய்வதற்காக, தற்போது தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு நாட்டைத் தெரிவு செய்யுமாறும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மரணத் தண்டனையை நிறைவேற்றுவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் காணப்படும் கயிறானது 12 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானிடமிருந்து நன்கொடையாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments