Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவி!! விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்டார்....?????

யாழில் கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவி!!   விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்டார்....????? யாழில் கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவி!! துரத்திச...

யாழில் கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவி!!   விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்டார்....?????



யாழில் கள்ளக் காதலனுடன் ஓடிய மனைவி!! துரத்திச் சென்ற கணவன்!! கோர விபத்தில் சிக்கி கொண்ட வாகனங்கள்...!!!
குடும்பப் பெண் ஒருவரை அவரது கணவரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்ற மற்றொரு குடும்பத்தலைவர் விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்டார்.
வான் ஒன்றில் கடத்திச் சென்ற போது, வீதியால் வந்த பேருந்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது.
மனைவியை வானில் கடத்திச் சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் கணவர் துரத்திச் சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றது.
சம்பவத்தையடுத்து கணவன் – மனைவி மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய குடும்பத்தலைவர் ஆகியோர் சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் சந்தியில்  இடம்பெற்றது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் வான் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளார்.
அந்தப் பெண் கடத்திச் செல்லப்படுவதைத் தடுக்க அவரது கணவர் முயற்சித்த போதும் இயவில்லை.
அதனால் வானை பின்தொடர்ந்து கணவர் துரத்திச் சென்றார். வான் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் பலாலி வீதியை திடீரெனக் கடந்த போது, எதிரே வந்த பேருந்துடன் விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் வான் மற்றும் பேருந்து என்பன பலத்த சேதங்களுக்கு உள்ளாகிய போதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
அத்துடன், வானை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த குடும்பத்தலைவரும் விபத்தில் சிக்குண்டார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்துத் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் அவர்கள் கைது செய்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் – மனைவி இருவரையும் பொலிஸார் விசாரணைக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தக் கடத்தலுடன் தொடர்புடையவரும் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் கொழும்பிலிருந்து வந்தே இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்

ليست هناك تعليقات

Latest Articles