Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட வேண்டும் ; ரசிகர்கள் விருப்ப மனு.!

எதிர்வரும் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சி தலைவரின் மகனும், நடிகருமான உதயநி...


எதிர்வரும் ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சி தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டுமெனக்கோரி அவரது ரசிகர்கள் சார்பில் திமுக தலைமையகத்தில் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் மேற்காண் அறிவிப்பு வெளியானது முதலே மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியை நாமே தக்க வைக்க வேண்டும். இல்லாவிடில் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற காரணத்தினால் தேர்தல் பணிகளில் மூர்க்கமாக களமிறமாகிவிட்டது திமுக தரப்பு. தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு, திரும்ப பெறப்பட்டு வருகின்றன.

ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட வேண்டுமென தெரிவித்து அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பிலும், பூண்டி கலைவாணன் அங்கே போட்டியிட வேண்டுமென தெரிவித்து சுமார் 40க்கும் மேற்பட்ட கட்சியினரும், உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டுமென அவரது ரசிகர்களும் அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை அளித்துவருகின்றனர்.

கட்சிக்காக அயராது பாடுபட்டவர்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க, தலைவரின் மகன் என்ற காரணத்திற்காக உதயநிதி திருவாரூரில் போட்டியிட வேண்டுமென சிலர் விருப்ப மனுக்களை அளிப்பட்டதையெல்லாம் வருத்தத்துடனேயே கடந்து செல்கின்றனர் உடன்பிறப்புகள்.

ليست هناك تعليقات

Latest Articles