Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ்ப்பாணத்தில் கடும் பதற்றம்; பலத்த கூக்குரலிட்ட மக்கள்; அங்குமிங்கும் சிதறிக்கிடக்கும் உந்துருளிகள்!

 யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தற்பொழுது கடும் பதற்றநிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. கொக்குவில் காந்தி...



 யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தற்பொழுது கடும் பதற்றநிலை நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
கொக்குவில் காந்திஜி சனசமூக நிலையத்திற்கு அண்மையில், சுமார் முப்பது உந்துருளிகள் சகிதம் வாள்கள் பொல்லுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் உட்புகுந்த இளைஞர் குழு ஒன்றினாலேயே இந்த பதற்ற நிலை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பெருமளவான உந்துருளிகளில் கொக்குவில் பகுதிக்கு வந்த குறித்த வன்முறைக் குழு அங்கிருந்த இளைஞர் குழுவால் விரட்டியடிக்கப்பட்டடது.

இதன்போது அங்குமிங்கும் சிதறியோடிய குறித்த வன்முறைக்குழு உந்துருளிகளை கைவிட்டுவிட்டு தலைதெறிக்க ஓடியுள்ளது.

இதில் நால்வர் மடக்கிப் பிடிக்கப்படு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுள்ளனர்.

இதுகுறித்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles