இலங்கை மீனவர் ஆறு பேர் நேற்று மாலைதீவில் கைது! இலங்கை மீனவர்கள் ஆறு பேர் அவர்கள் பயணித்த படகுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலை தீவு ஊடகமொ...
இலங்கை மீனவர்கள் ஆறு பேர் அவர்கள் பயணித்த படகுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலை தீவு ஊடகமொன்று செய்தி வெளி யிட்டுள்ளது.
“ஓஷதி ஐ” என்ற இலங்கை மீனவர்களின் படகொன்று கடந்த புதன்கிழமை காத்தூ தீவுப் பகுதியி லிருந்து 42 கடல் மைல்களுக்குள் வைத்து மாலைதீவு மீனவ படகொ ன்றினால் அடையாளம்
காணப்பட்டதாக குறித்த ஊடகம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதன்போது மாலைத்தீவின் பிர த்தியேக பொருளா தார மண்டலத்திற் குள் எல்லைமீறிச் சென்ற குறித்த மீன வர்கள் கைது செய் யப்பட்டு தலைநகர் மாலிக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு கட லோரக் காவல்படை யினரால் கைது செய்யப்பட்ட 6 பேரும், படகுடன் ஃபுவாமுல்லா நகருக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் பொலிஸாரிடம் ஒப் படைக்கப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது.



ليست هناك تعليقات