Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்!- இங்கு வாழ்பவரும் மனிதர் தானே!

தென்னிலங்கையில் என்ன ஒரு அனர்த்தம் நிகழ்ந்தாலும் நிவாரண வாகனத் தொடருடன் படையெடுக்கும் சக்தி, சூரியன் போன்ற ஊடகங்கள் வடக்கில் ஏற்படும் இயற்க...

தென்னிலங்கையில் என்ன ஒரு அனர்த்தம் நிகழ்ந்தாலும் நிவாரண வாகனத் தொடருடன் படையெடுக்கும் சக்தி, சூரியன் போன்ற ஊடகங்கள் வடக்கில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களைப் புறக்கணித்தே வந்துள்ளன. தற்போதைய வெள்ள அனர்த்தங்களையும் கணக்கெடுக்காத நிலைமை.

இந்த ஊடகங்களின் மேலதிகாரிகள் யாரெனப் பார்த்தால் அனைவரும் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள்தான். அவ்வாறிருந்தும் இவர்களின் மனச்சாட்சி உறுத்தவில்லையே என்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.

சமூகப் பொறுப்பு என்பது இரத்தத்தோடு ஊறியதாய் இருக்கவேண்டியது. அது எல்லா முதலாளிகளுக்கும் மேலதிகாரிகளுக்கும் இலகுவில் அமைந்துவிடாது. ஆனால் சமூகப் பொறுப்போடு தென்னிலங்கையில் உதவுகிறார்கள் தானே என்ற கேள்வி எழுமாயின் இந்த ஊடகங்களை கடந்த சில வருடங்களாக உற்றுப் பார்ப்போருக்கு இந்த லொஜிக் விளங்கும்.

ஆனாலும் வெளியிலிருந்து யாருடைய உதவியும் தேவையில்லை என்று அடித்துச் சொல்லுமளவுக்கு எமது இளைஞர்களின் சமூக பொறுப்புடைமை தலைமுறைகளைத் தாண்டியும் உயிர்ப்புடன் இருக்கும். செய்தியறிந்தவுடன் மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளுடனும் துடிப்புடனும் விவேகத்துடனும் செயற்பட்டுவரும் எமது இளைஞர்கள்தான் எம் இனத்தின் ஹீரோக்கள். அது போராட்ட காலத்திலும்சரி இப்போதும் சரி, இந்த நிலை தொடர்ந்துவரும். தலை வணங்குகிறோம்!

வடக்குக் கிழக்கைச் சேர்ந்த மக்கள், தென்னிலங்கையின் கதை மட்டும் சொல்லும் இப்படியான ஊடகங்களை புறக்கணிக்கவேண்டும்.


ليست هناك تعليقات

Latest Articles