Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இதனால் தான் நாங்கள் புலிகளை மதிக்கிறோம் - புலி என்றால் பெருமை கொள்கிறோம்

சுனாமிப் பேரழிவின் போது பல நாட்டு அரசாங்கங்களே செய்வதறியாது பொறிகலங்கிப் போய் நின்ற நேரத்தில் புலிகளின் செயற்பாடுகள் உலக நாடுகளையே ஆச்சரியப...

சுனாமிப் பேரழிவின் போது பல நாட்டு அரசாங்கங்களே செய்வதறியாது பொறிகலங்கிப் போய் நின்ற நேரத்தில் புலிகளின் செயற்பாடுகள் உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்தன.

உலகமே வியந்தது தமிழீழ அரசின் கட்டமைப்பை பார்த்து, கிட்டத்தட்ட 25 வருடங்களாகக் கடும் யுத்தத்தை சந்தித்த ஈழத்தின் வடக்கு கிழக்கில் அடிப்படை வசதிகளே கட்டமைக்கப்படாத நிலத்தில் சுனாமி அனர்த்தத்தில் புலிகளின் செயற்பாடுகள் உலகநாடுகளை வியப்பாய் பார்க்கவைத்தன.

ஈழப்பகுதிகளில் கோரதாண்டவம் ஆடிய சுனாமியின் சில மணித்தியாலங்களுக்குள் தலைவரின் உத்தரவுகள் பறந்தன, உடனடியாகப் புலிகள் மீட்பு நடவடிக்கையை முழுவீச்சில் ஆரம்பித்தனர். பொதுமக்களிடம் வாகனங்கள் பெறப்பட்டன, தேவாலயங்கள், பாடசாலைகள் உடனடியாக நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டன.

காயமடைந்தவர்களை காப்பாற்ற திலீபன் மருத்துவசேவை இரவு பகலாக போராடியது. மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர்.

சுனாமி பாதித்த பிரதேசங்களில் களவுகளை தடுக்க உடனடியாக ஆயுதம் ஏந்திய புலிகள் இறக்கப்பட்டனர்.

சமைத்த உணவுகள் , பால்மா , பெண்களுக்கான விசேட தேவைகள் , காணாமல் போனோரை பற்றி தகவல்களுக்கு உடனடியாக குழுக்கள் அமைக்கப்பட்டது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டன.

இறந்தவர்களை புதைக்க முன்னர் நிழற்படம் எடுக்கப்பட்டு விசேட குறியீடுகளின் அடிப்படையில் தனித்தனியாக புதைக்கப்பட்டனர்.
நாய்கள் பிணங்களை தின்பதை தடுப்பதற்க்கு தெருநாய்கள் எல்லாம் பிடித்து ஒரு இடத்தில் அடைக்கப்பட்டன.

வீட்டு நாய்கள் வளர்ப்பவர்களுக்கு கடும் உத்தரவு போடப்பட்டது, சுனாமி ஏற்பட்டு 12 மணி த்தியாலங்களுக்குள் 300மில்லியன் தலைவரின் நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது. புலம்பெயர் தேசங்களில் மருத்துவர்கள் தாதியர்களாக இருப்போரின் உதவி கோரப்பட்டது லண்டன் கனடா ஜெர்மன் நெதர்லாந்து போன்ற இடங்களில் இருந்து பெரும்பாலனவர்கள் சென்றனர்.

உயிரிழப்பு அதிகமான ஈழத்தில் புலிகள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தற்காலிக வீடுகளை அமைத்தனர் கடலுக்குப் போக யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. கடலில் சீற்றங்கள் மற்றும் நிகழ்வுகளை கண்காணிக்க விசேட செயற்கைகக்கோளின் ( கனடா ) உதவி பெறப்பட்டது .

சிறிலங்கா அரசுக்கு முன்பே நவீன சுனாமி கண்கானிப்பு மையம் தமிழ்ச்செல்வனால் திறந்துவைக்கப்பட்டது.

இச்சமயம், சுனாமி உதவிநிதிகளைக் கொண்டு , சுமார் 150 மில்லியன் ரூபா பெறுமதியில் ஈரானில் இருந்து இராணுவத் தளபாடங்களை கொள்வனவு செய்ய இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சிங்கள மக்களுக்கும் புலிகள் தங்கள் சேமிப்பு நிலையங்களில் இருந்து உணவுப்பொருட்களைக் கொடுத்து உதவினர். கிழக்கில் புலிகள் சுனாமியில் சிக்கிய சிங்கள இராணுவத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளிலும் தங்களை ஈடுப்படுத்தியிருந்தனர். இந்தக் காலப்பகுதியில் தான் இலங்கை அரசாங்கத்தையும், புலிகளையும் இணைத்து சுனாமிக்கு பின்னரான நிவாரணம் வழங்கும் குழு நிறுவப்பட்டது

Post - Tsunami Operational Management Structure P-TOMS என்ற அந்தக் குழுவில் அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் திருகோணமலை போன்ற தமிழர் பிரதேசங்களில் ஏற்பட்ட சேதங்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்கான புனரமைப்பு வேலைகளையும் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. அந்தக்குழுவில் அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவரும், புலிகள் பிரதிநிதி ஒருவரும், முஸ்லீம்களின் பிரதிநிதி ஒருவருமாக எல்லாமாக மூன்று பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

விடுதலைப்புலிகளின் சமிக்ஞையினைப் பற்றி சிங்கள அரசாங்கப் பிரதிநிதி சொல்கின்றார். ''இயற்கையின் காரணமாக அவர்களுக்கும், நமக்கும் இருந்த வேறுபாடுகளைக் களைந்து விட்டு அவர்கள் எங்களோடு முதல் முதலாக வேலை செய்ய முன்வந்திருப்பதைப் பாராட்டி ஏற்றுகொள்ளவேண்டும்".
இந்த முயற்சியினைக் கனடாவும், ஐரோப்பிய ஒன்றியமும் மிகவும் ஊக்கத்தோடு வரவேற்றிருந்தன.

அன்றைய ஐக்கியநாடுகளின் பொதுசெயலாளர் கோபி அனான் கூறும்போது ''சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தம் ஏற்பட்டதை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்." என்றார்.

உலகநாடுகள் ஏற்றுக்கொண்ட P-Toms முயற்சியினைக் கூட இலங்கை நீதிமன்றத்துக்கூடாக இடைக்கால உத்தரவு வாங்கித் தடைசெய்தார்கள்.

இலங்கையின் அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடு என்று சொல்லி அதை முடக்கிப்போட்டு, உலகத்தை மீண்டும் ஏமாற்றிவிட்டார்கள் சிங்களத் தலைவர்கள்.

இயற்கை அனர்த்தத்திலிருந்து மீளுவதற்கான நிவாரண முயற்சியினைக் கூடத் தர மறுத்து, அந்த முயற்சியினைத் தடுக்க அவர்களின் சட்டத்தை அவர்களுக்காக பயன்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள்.




ليست هناك تعليقات

Latest Articles