Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழில் சோகம்; குளத்தில் குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அவலம்!

நத்தார் தினத்தன்று குளத்தில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மணியம் தோ...


நத்தார் தினத்தன்று குளத்தில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

அதேபகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையாரான ராசன் குலேன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நத்தார் தினமாகிய நேற்று மாலை (25) அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றவர், நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரை காணவில்லை என்று வீட்டுக்காரர் தேடிய போதே, குளத்தில் சடலமாக கிடப்பதைக் கண்டுள்ளனர். இரவு வேளை என்பதனால், சடலம் மீட்க முடியாமையினால், இன்று (26) யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததன் பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ليست هناك تعليقات

Latest Articles