Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வெள்ளத்தில் மூழ்கியிருந்த கிளிநொச்சி; பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் வெளியீடு!

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 12 ஆயிரத்து 597 குடும்பங்களைச் சேர்ந்த 41,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம்...


கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 12 ஆயிரத்து 597 குடும்பங்களைச் சேர்ந்த 41,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் இப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5885 பேர் 19 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.

அந்த வகையில் கரைச்சி பிரதேசத்தில் 3,142 குடும்பங்களைச் சேர்ந்த 10,339 பேரும், கண்டாவளையில் 7,635 குடும்பங்களைச் சேர்ந்த 24,820 பேரும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 1819 குடும்பங்களைச் சேர்ந்த 6156 பேரும் பூநகரியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு 23 வீடுகள் முழுமையாகவும், 314 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது எனவும் குறித்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات

Latest Articles