திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மிகிந்தபுற பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர்...
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மிகிந்தபுற பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த இளைஞர் திருகோணமலை, அன்புவளிபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (23வயது) என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவருடன் பயணித்த அதே இடத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (17 வயது) படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கன்னியா பகுதியிலிருந்து வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



ليست هناك تعليقات