வவுனியா நீதிமன்றுக்கு முன்பாக ஏ9 வீதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கபட்டுள்ள வாகனங்கள் மிகவிரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு...
வவுனியா நீதிமன்றுக்கு முன்பாக ஏ9 வீதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கபட்டுள்ள வாகனங்கள் மிகவிரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.
வழக்குகள் நிலுவையில் உள்ள வாகனங்கள், வவுனியா நீதிமன்றுக்கு முன்பாக பலவருடங்களாக தரித்து விடப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்களை தற்காலிகமாக வவுனியா நகரசபையின் வளாகத்துக்குள் நிறுத்துவதற்கு அனுமதிக்குமாறு மாவட்ட நீதவான் கோரிக்கை விடுத்துள்ளார் அதற்கமைவாக குறித்த வாகனங்கள் நகரசபையின் வளாகத்துக்குள் ஒதுக்கபட்ட இடத்தில் விடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



ليست هناك تعليقات