Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

ஒதியமலை படுகொலையின் 34 ம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் ...


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் சுட்டுகொல்லப்பட்ட 32 பொதுமக்களில் 34 ம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் நினைவு தூபி திறந்துவைக்கும் நிகழ்வும் இன்று காலைஇடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் அதிகாலை வேளையில் கலந்துரையாடலுக்கென அழைத்துசென்று ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் வைத்து சுட்டுகொல்லப்பட்டனர்.

இதன்போது உயிரிழந்த 32 பொதுமக்களின் 34 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவு கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த 32பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியின் திறப்புவிழா நிகழ்வும் ஒதியமலைபிள்ளையார் ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டபதிறப்புவிழாவும் இடம்பெற்றது

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா 2 இலட்சம்ரூபா நிதி ஒதுக்கீட்டில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியினை திறந்துவைத்தார்.

படுகொலை செய்யப்பட்ட 32 பேரினுடைய உற்றார் உறவினர்கள்வருகைதந்து அவர்களுக்கு மாலை சூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

நினைவுரைகளை தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேடஆத்மா சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்று பின்னர் ஒதியமலை பிள்ளையார்ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டபம் திறந்து வைக்கப்பட்டுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.




No comments

Latest Articles