Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள்!

புதுக்குடியிருப்பு, சுதந்திபுரம் பிரதேசத்தில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்கள், யுத்த காலத்தில் விடுதலைப் பு...


புதுக்குடியிருப்பு, சுதந்திபுரம் பிரதேசத்தில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்கள், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்தவை எனத் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சுற்றிவளைப்பின் போது 2250 டி 56 ரக தோட்டாக்கள், ஆர்.பி.ஜி. தோட்டக்கள் 03, 06 செல் உட்பட மேலும் பல அயுதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் கிளிநொச்சி முகாமில் உள்ள குண்டு செயலிழப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Latest Articles