எரிபொ ருள்களின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பேருந்து போக்குவரத்து கட்டணங்களை குறைக்க முடியாதென பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளன. ...
அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துவருகின்ற நிலையில், பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துவருகின்றமையால் தாங்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பேருந்து கட்டணங்களின் விலைகளை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.



No comments