Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை! இன்று இரவும் ஆபத்து!!!

இன்றும் இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்...


இன்றும் இரவு மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் கஜா சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 180 கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் முல்லைத்தீவில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதிகளுக்கு அப்பால் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுப்பட வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண குடாநாட்டில் 'கஜா' சூறாவளியின் காரணமாக 770 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 வீடுகள் முழுமையாகவும், 483 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Latest Articles