Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

மட்டக்களப்பு ஆலயமொன்றில் பக்தர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இன்றைய தினம் சனநெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்ற...


மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இன்றைய தினம் சனநெரிசலில் சிக்கி பலர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

குறித்த தேவஸ்தானத்தில் ஏகாதச ருத்ர வேள்வி கடந்த 19 ஆம் திகதி முதல் இன்று வியாழக்கிழமை வரை நடைபெற்றது.

இதில் இறுதிநாளான இன்று பிற்பகல் அங்கு வழங்கப்பட்ட ருத்திராட்ச மாலை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இதனைப் பெற மக்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றதனால் நெரிசலில் அகப்பட்டு பதினேழுபேர் காயமடைந்துள்ள நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 3 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 14 பேர் தொடர்ந்தும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அகத்தியர் பெருமான் திருவானைப்படி சித்தர்களின் குரல் மஹா சித்தர்களின் ஏற்பாட்டினால் உலக நன்மைக்காகவும், உலகில் மாபெரும் சித்தர்களின் அருளாட்சி மலரவும், ஈழவள நாடு மாபெரும் சிவபூமியாகவும் , ஸ்வர்ண பூமியாகவும், குபேர பூமியாகவும் திகழவும் கார்த்திகை மாதம் 2018 -19, 20, 21, 22, ஆகிய திகதிகளில் இலங்கையில் மட்டக்களப்பில் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் தேவஸ்தானத்தில் ருத்ர வேள்வி இடம்பெற்றது.

இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள மாகா சித்தர்களினால் இந்த ஏகாதச ருத்ர வேள்வி மிகவும் பிரமாண்டமான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



No comments

Latest Articles