Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இறுதி யுத்தத்தை நடத்தியது நானே – விடுதலைப்புலிகள் கொழும்பை அழிக்க திட்டமிட்டிருந்தனர்!

இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களில் விடுதலைப்புலிகள் சென்னையிலிருந்தோ அல்லது வேறு ஏதோவொரு காட்டுப்பகுதியில் இருந்தே கொழும்பின்...



இறுதி யுத்தத்தின் கடைசி இரண்டு வாரங்களில் விடுதலைப்புலிகள் சென்னையிலிருந்தோ அல்லது வேறு ஏதோவொரு காட்டுப்பகுதியில் இருந்தே கொழும்பின் மீது விமானதாக்குதலை மேற்கொண்டு கொழும்பை அழிக்க திட்டமிட்டிருந்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விமான தாக்குதல் குறித்த அச்சம் காரணமாக அனைவரும் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டனர் எனவும் தான் அவ்வவேளையில் பிரதி பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவேளையில் தானும் கொழும்பில் தங்கியிருக்கவில்லை எனவும் கொழும்பிற்கு வெளியே பல இடங்களில் தங்கியிருந்ததாகவும் அந்தநேரத்தில் கொழும்பு பாதுகாப்பற்றதாக விளங்கியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இறுதி யுத்தத்தை நடத்தியது தானே எனவும் அவ்வேளை ஏனைய அனைத்து தலைவர்களும் ஓடி ஒளித்துக்கொண்டிருந்தார்கள் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Latest Articles