Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சென்னை: கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீ...




சென்னை: கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற குன்றத்தூர் அபிராமிக்கு அக்டோபர் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த குன்றத்தூர் மூன்றாம் கட்டளையை சேர்ந்த அபிராமிக்கு அப்பகுதியில் உள்ள பிரியாணிக்கடை ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதையடுத்து அவருடன் வாழ நினைத்த அபிராமி, அதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளை கடந்த மாதம் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் துடிக்க துடிக்க கொன்றார்.

பின்னர் கேரளா தப்பிச்சென்ற அவரை நாகர்கோவிலில் கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்து பிடித்தனர் போலீசார்.

இதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்ட அபிராமி கள்ளக்காதலன் சுந்தரத்தின் ஆலோசனைப்படியே குழந்தைகளை கொன்றதாக கூறினார்.

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுந்தரத்திற்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி மற்றும் சுந்தரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அபிராமி மற்றும் சுந்தரத்தை அக்டோபர் 12ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Latest Articles