Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

திடீர் உடல்நலக்குறைவு ; திமுக தலைவர் ஸ்டாலின் அப்போலோவில் அனுமதி.!

திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் திடீர் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப...



திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் திடீர் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு நேற்று இரவு 11-30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக, மருத்துவமனை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவப் பரிசோதனைகள் நிறைவுபெற்ற பிறகு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்றோ அல்லது நாளையோ வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காரணத்தின் காரணமாக பதற்றத்தில் உள்ளனர் திமுக தொண்டர்கள்.

No comments

Latest Articles