Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கம்பளையில் மீட்கப்பட்ட சீருடை, தீவிர விசாரணையில் பொலிஸ்!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கடகல பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ...



கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கடகல பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டில் கூரான வாள்கள், இராணுவ சீருடை உட்பட பல பொருட்களை கண்டுபிடித்துள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்கவே கம்பளை பொலிஸார் தொழுவ பிரதேசத்தில் அமைந்துள்ள குருகெல என்ற இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டபோது மேற்படி சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேற்படி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் முச்சக்கர வண்டி சாரதி என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதுடன் மீட்கப்பட்ட ஆயுதங்கள் கொள்ளைச் சம்பவங்களுக்காக பயன்படுத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டு வரவதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments

Latest Articles