Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்துள்ள கொரோனா தொற்று.

  யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ....

  யாழ்ப்பாணத்தில் மேலும் 129 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர ஆய்வுகூடத்துக்கு 1003 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் குறித்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் 88 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்ப்பாணம் மாநகர சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இதன்மூலம் கடந்த 14 நாள்களில் யாழ்ப்பாணம் மாநகர கடைத்தொகுதிகளைச் சேர்ந்த 87 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Latest Articles