Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு - கல்கிஸ்ஸையில் சம்பவம்.

  கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவில் காலி வீதியில் ஒரு வீட்டின் அருகே கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளத...

  கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவில் காலி வீதியில் ஒரு வீட்டின் அருகே கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 22 வயதான கல்கிஸ்ஸை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


No comments

Latest Articles