Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - மட்டக்களப்பு கிண்ணியா.!!!

மட்டக்களப்பு கிண்ணியா காக்கா முனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது. தம்பலகாம...

மட்டக்களப்பு கிண்ணியா காக்கா முனை பிரதேசத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது.

தம்பலகாமம் புளியடி பகுதியைச் சேர்ந்த 19 வயதான எம்.எச்.ஜெஸ்மீனா எனும் இளம் யுவதியே இவ்வாறு தூக்கிடட்டு உயிரிழந்துள்ளார்.

இவ் யுவதி தம்பலகாமம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை காக்காமுனையில் உள்ள சகோதரியின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

யுவதிக்கு தந்தை இல்லை என்றும் , தாயார் வெளி நாட்டில் பணிப் பெண்ணாக பணி புரியும் நிலையில், தாயார் நாடு திரும்பியதும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதியளித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த யுவதி மனமுடைந்து தற்கொலை செய்துள்ளதாக அறிய முடிகிறது.

இவ் யுவதியின் சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் மேலதிக உடற் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறாத்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.



No comments

Latest Articles