Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

திருமணவீட்டுக்கு சென்று வந்த சிறுவனுக்கு நடந்த துயரம்; கண்ணீர்மல்க கதறும் உறவுகள்!

திருமண வீட்டுக்கு சென்றுவந்தவேளை முச்சக்கரவண்டி வேககட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளானதில் சிறுவன் ஒ...


திருமண வீட்டுக்கு சென்றுவந்தவேளை முச்சக்கரவண்டி வேககட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளானதில் சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் முதலாம் பிரிவு ஜே.பி. வீதியைச் சேர்ந்த 8 வயதுடைய சதீஸ்குமார் சஞ்சேயன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவனாவான்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

திருக்கோவில், அக்கரைப்பற்று பிரதான வீதி தம்பட்டை பிரதேசத்திலுள்ள தமது வீட்டில் இருந்து இன்று காலை சிறுவனின் மாமானார் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் சிறுவனின் தாயார், அம்மம்மா ஆகியோரை ஏற்றிக் கொண்டு அக்கரைப்பற்று பிரதேசத்தில் திருமணவீடு ஒன்றுக்கு சென்று பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி பயணித்தனர்.

இதன்போது அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதான வீதியின் தம்பட்டை பிள்ளையார் ஆலயத்துக்கு அருகிலுள்ள வீதி வளைவில் முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளனதில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Latest Articles