Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

இழிகுலமே இயல்பிறழ்ந்து வாழும் - இனிமேல் திருந்து

ஆண் ஆதிக்க சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகடை பொருளே  தாலி என்றும் தம்மை தாமே  புத்திஜீவிகள்  எனவும் பெண் அடிமைத்தனத்தை தாமே வேரறுக்கப் புறப்பட்டத...

ஆண் ஆதிக்க சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகடை பொருளே  தாலி என்றும் தம்மை தாமே  புத்திஜீவிகள்  எனவும் பெண் அடிமைத்தனத்தை தாமே வேரறுக்கப் புறப்பட்டதாய் புதுக்கதை சொல்லிப் புறப்பட்ட போலிப் புரட்சியாளர்களுக்கு புரியாது எம் இந்து சமயத்தின் தமிழர் பண்பாட்டின் அருமை பெருமைகள். அர்த்தநாரீஷ்வரர் வடிவம் கொண்டு ஆணுக்குப் பெண் சரிநிகர்  என அன்றே பெருமை தந்தவர்கள் நாங்கள்.. 

தாலி கட்டுதல் தமிழ் வழிவந்த திராவிட குடினருகே உரியது. 

மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் ஆணும் பெண்ணும் தாங்கள் விரும்புவோரை தெரிவு செய்து கூடி வாழ்ந்தார்கள். காலப்போக்கில் உடல்உள ஆரோக்கியம் நிறைந்திருக்கவேண்டி பல அறிவுபூர்வமான செயல்களை உருவாக்கி திருவிழா பண்டிகை கலை கலாச்சாரம் என வகுத்து இறைவன் முன்னிலையில் செய்தார்கள்... செய்வித்தார்கள். 

திருமணத்தின் போது பெண்ணுக்குத் தாலி கட்டுவதன் அர்த்தம் அவளை அடிமை ஆக்குவதல்ல. சில படித்தமுட்டாள்கள் அப்படி புரிந்து கொண்டு நம் பண்பாட்டை சிதைக்க முற்படுகின்றார்கள். 

இவர்களின் தாய் தந்தை தமிழ்பாடசாலை ஆசிரியர்கள் சொந்தபந்தம் உறவினர்கள் என்று யாருமே நம் பண்பாட்டையோ தாலியின் மகத்துவத்தையோ சொல்லிக் கொடுக்கவில்லையா.? அல்லது அவர்களுக்கும் தெரியாதா... புலம்பெயர் தேசங்களிலேயே சுவிஸ் நாட்டில்தான் அதிகமான கலைகலாச்சார நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அப்படியாயின் ஏன் இந்த நிகழ்வுகள்?.. 

ஏன் தமிழ்ப் பாடசாலைகள்... கலை நிகழ்வுகள்?... 

ஆயிரம்காலத்துப்பயிரான திருமணம் பற்றி விளக்கமில்லாத பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்ததா?..  

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வது அல்ல. 

வெறுமனே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவதே தாலி (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூட்சுமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.

அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.

இந்த ஒன்பது நல்ல குணங்களைக் கொண்ட உன்னை என் மனைவியாக ஏற்று, உன் கணவனாகின்றேன் என்று உறவினர்கள் முன்னிலையில் உறுதி கொண்டு தாலியை கட்டுகிறான் மணமகன். 

இன்று முதல் நீ என்னுள் பாதி என்று அர்த்தநாரீஸ்வரர் ஆகின்றனர் தம்பதி.

மஞ்சள் கோர்த்து தாலி கட்டுவது பெண்ணின் அகத்தூய்மை புறத்தூய்மையை பாதுகாக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் சக்தி மஞ்சளிடம் உண்டு. 

பிறந்த குழந்தை அழும்போது தாயின் நெஞ்சோடு அணைத்துக் கிடத்தினால் அழுகையை நிறுத்திவிடும்.... ஏன் தெரியுமா.. 

வயிற்றினுள் தாயின் இதயத்துடிப்பைக் கேட்டு வளர்ந்த குழந்தை பிறந்தபின் இதயத்துடிப்புச் சத்தம் அல்லாதபிற சத்தங்களைக் கேட்டு பயம் கொள்கின்றது. மீண்டும் தாயின் இதயத்தின் அருகே அமைதி கொள்கின்றது. பெண்ணின் நெஞ்சோடு இருக்கும் தாலி இதயத்தின் துடிப்பாற்றலை சீராக வைத்திருக்கும். 

ஈழத்தமிழ்ப்பெண்கள் நம் கலைகலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாக்கின்றனர். ஆனால் அண்மையில் ஆணுக்குத்தாலி கட்டியவளை சுவிஸ்தமிழ்ப் பெண் என்று கூறுவதே முறையாகும்.

இதிலிருந்து கூறியவற்றால் இக்காலத்திலோ இனி வருங்காலத்திலோ எந்தப்பெண்ணும் தாலியை ஆடவர் கழுத்தில் கட்டும்படி கூறமாட்டாள். தான் கழுத்தில் கட்டிய தாலியை பேணிக்காக்கக் கூடியவளாக வளர்ந்துகொள்வாள். வள்ளுவரின் வாக்கு... இழிகுலமே இயல்பிறழ்ந்து வாழும்.




No comments

Latest Articles