“திலீபன்” அனேகமானோர் கடந்து செல்வர் காரியுமிழ்ந்து தூர வீசியெறியப்பட்ட உனது நினைவுகளை யாருக்கும் தெரியாமல் அவற்றைப் பொறுக்கிக் கெ...
“திலீபன்”
அனேகமானோர் கடந்து செல்வர்
காரியுமிழ்ந்து தூர வீசியெறியப்பட்ட
உனது நினைவுகளை
யாருக்கும் தெரியாமல்
அவற்றைப்
பொறுக்கிக் கொள்கிறேன்
உன்னதமெனப் போற்றும்
கொள்கையொன்றுக்காக
மனிதனொருவனால்
வாழ்வினை
உதறியெறிந்திட முடியுமா
வீரன் தான் அவன்
என்றுமே எனக்கு
பெயர் , ஊர்
அடையாளஅட்டை
எதுவும் தேவையில்லை
‘தேசப் பிரேமி’களின்
கல்வீச்சுக்கள் எனை வந்து சேர முன்னர்
திலீபன்…
இன்றைய இராப்பொழுதும்
உனது நினைவுகளை
உள்ளத்தினுள்ளேயே
சிறைப்படுத்திக் கொள்கிறேன்
யாருமறியாமல்.
தியாகி திலீபன் பற்றி சிங்களக் கவிஞர் சுனந்த கார்தியவசம்
தமிழில் : ஃபஹீமாஜஹான்

அனேகமானோர் கடந்து செல்வர்
காரியுமிழ்ந்து தூர வீசியெறியப்பட்ட
உனது நினைவுகளை
யாருக்கும் தெரியாமல்
அவற்றைப்
பொறுக்கிக் கொள்கிறேன்
உன்னதமெனப் போற்றும்
கொள்கையொன்றுக்காக
மனிதனொருவனால்
வாழ்வினை
உதறியெறிந்திட முடியுமா
வீரன் தான் அவன்
என்றுமே எனக்கு
பெயர் , ஊர்
அடையாளஅட்டை
எதுவும் தேவையில்லை
‘தேசப் பிரேமி’களின்
கல்வீச்சுக்கள் எனை வந்து சேர முன்னர்
திலீபன்…
இன்றைய இராப்பொழுதும்
உனது நினைவுகளை
உள்ளத்தினுள்ளேயே
சிறைப்படுத்திக் கொள்கிறேன்
யாருமறியாமல்.
தியாகி திலீபன் பற்றி சிங்களக் கவிஞர் சுனந்த கார்தியவசம்
தமிழில் : ஃபஹீமாஜஹான்



No comments