Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

வீதி வேகத்தடையில் தூக்கி வீசப்பட்டு இளைஞன் படுகாயம்!

கிளிநொச்சியில் உள்ள பல வேகத்தடைகள் வீதியின் நடுவில் ஏதோவயல்வரம்பு இருப்பது போல் தோற்றமளிக்கிறது. அந்த இடத்தில் வேகத்தடைகள் இருக்கிறது என்ற ...

கிளிநொச்சியில் உள்ள பல வேகத்தடைகள் வீதியின் நடுவில் ஏதோவயல்வரம்பு இருப்பது போல் தோற்றமளிக்கிறது. அந்த இடத்தில் வேகத்தடைகள் இருக்கிறது என்ற அடையாளங்கள் எதுவும் இல்லை. 

நம்மூரில்  வேகத்தடைகள் இருப்பது கண்களுக்கு அகப்படாது. வாகனங்களில் வருவோர் திடீரென அருகில் வந்து  வேகத்தடைகள்  இருப்பதைப் பார்த்து பிரேக் பிடித்தார் என்றால் வண்டிகள் சறுக்கி விட்டு விழுவது தினப்படி காட்சியாக அனைத்து இடங்களிலும் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் உருத்திரபுரம் நீவில் வீதியில் நேற்று மாலை  மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் வேகத்தடையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ் வீதித்தடையானது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீதித்தடை அமைக்கப்பட்டுள்ளமை குறித்த எச்சரிக்கை பலகை எதுவும் காட்சிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான வேகத்தடைகள் குறித்து பிரதேச அமைப்புக்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபைகள் நடவடிக்கை எடுக்காது விடின் உயிரிழப்புக்கள் தவிர்க்க முடியாjது என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



No comments

Latest Articles