Page Nav

HIDE

Breaking News:

latest

Ads Place

“மூன் வாக்” வீடியோவால் சீரமைக்கப்படும் குண்டும் குழியுமான சாலை..!

பெங்களூருவில் குண்டுகுழியுமாக இருக்கும் சாலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட “மூன் வாக்” வீடியோ வைரலானதையடுத்து, அந்த சாலை சீரமைப்பு பணிகள்...

பெங்களூருவில் குண்டுகுழியுமாக இருக்கும் சாலையை கிண்டல் செய்து வெளியிடப்பட்ட “மூன் வாக்” வீடியோ வைரலானதையடுத்து, அந்த சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தூங்காநகரில் உள்ள முக்கிய சாலை, குண்டுகுழியுமாக இருப்பதை அதிகாரிகள் கவனத்துக்கு செல்லும் பொருட்டு, நிலவின் மேற்பரப்பு போன்று சாலையில் 3டி ஓவியத்தை நஞ்சுந்தசாமி என்ற ஓவியர் வரைந்திருந்தார்.

அதன் மீது விண்வெளி வீரர் ஒருவர் நடந்து செல்வது போன்று வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களிலும் பதிவிட்டார். இந்த வீடியோ ஏராளமானோரால் ரசிக்கப்பட்டு அதிகளவில் பகிரவும் பட்டது. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு கண்டனமும் எழுந்தது.

இது குறித்து அறிந்த நகர கட்டுமான நிர்வாகத்தின் ஆணையர் அனில் குமார், சாலையை விரைவாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து தூங்காநகரில் சாலை மேம்பாட்டுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி என்று ஓவியர் நஞ்சுந்தசாமி தெரிவித்துள்ளார்.


No comments

Latest Articles